சிலோன் மீடியா போரத்தின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் அறிமுக விழா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜித் தலைமையில் சிலோன் மீடியா போரத்தின் தலைமையகத்தில் இன்று (14) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா, கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிவின் செயலாளர் ஏ.எல்.எம்.இன்சாட்,, சிலோன் மீடியா போரத்தின் உப தலைவர் எஸ் அஸ்ரஃப்கான், பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர், முன்னாள்.இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப்.எம்.தில்சாத், சிலோன் மீடியா போரத்தின் உப செயலாளர்களான கியாஸ் ஏ . புஹாரி, எம்.எம்.ஜபீர் உட்பட போரத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸினால் போரத்தின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் வெளியிட்டு வைக்கப்பட்டது.


(ஐ.எல்.எம்.நாஸிம், எம்.என்.எம். அப்ராஸ், அபு ஹின்சா )
கடந்த மூன்று வாரங்களாக தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் வசிக்கும் ஊடகவியலாளர்களின் நலன் கருதி சிலோன் மீடியா போரத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (17) வியாழக்கிழமை மாலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.நஸீல், சிலோன் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், பொருளாளர் யூ.எல்.என். ஹுதா, பிரதித்தலைவர் எஸ். அஸ்ரஃப்கான், உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களான என்.எம்.அப்றாஸ், சஹீர் அஹமட் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேச 42 தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிவாரணப் பொதிகளுக்கான அனுசரணையினை கல்முனை, சாய்ந்தமருது பிரதேச தனவந்தர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Uploading: 1945772 of 1945772 bytes uploaded.

Uploading: 1945772 of 1945772 bytes uploaded.

(நூருல் ஹுதா உமர்)

இலங்கையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று சூழலில் தனிமைப்படுத்தப்பட்டு முழுமையாக முடக்கப்பட்டிருக்கும் காத்தான்குடி பிரதேச ஊடக உறவுகளின் நலன் கருதி நீண்ட தூரம் பயணித்து இந்நிவாரண உதவிகளை கொண்டு வந்து உதவிய சிலோன் மீடியா போரத்தினருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்ளும் இந்த நேரத்தில் இந்த உதவியை செய்ய முயற்சிகளை மேற்கொண்ட உங்களின் சேவையை பாராட்டுகிறேன் என காத்தான்குடி ஊடகவியலாளர்கள் சார்பில் பேசிய சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார்.
சிலோன் மீடியா போரத்தின் நிவாரணப் பணி அம்பாறை மாவடத்தின் அக்கரைப்பற்று, கல்முனை பகுதியை தொடர்ந்து மூன்றாம் கட்டமாக முடக்கப்பட்டிருக்கும் காத்தான்குடி பிரதேச ஊடகவியலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (16) மாலை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜீத் தலைமையில் பிரதேச செயலாளர் யூ.உதயசிறீதரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ரீ.எல்.ஜவ்பர்கான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சுனாமி காலத்தில் பல சிக்கல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து நிவாரண பொருட்களை அம்பாறை மாவட்ட ஊடக நண்பர்களுக்கு கொண்டு சேர்த்த நினைவுகளை நினைவு கூறியதுடன் இன்று நீங்கள் இக்கட்டான இக்கால கட்டத்தில் எங்களின் நலனுக்காக வந்த உதவியதை மெச்சுகின்றோம்.
சிறந்த முன்மாதிரியாக செயற்படும் சிலோன் மீடியா போரம் பல முன்மாதிரியான முன்னெடுப்புக்களை மட்டுமின்றி ஊடகவியலாளர்களுக்கிடையே நட்புறவை வளர்ப்பதிலும் முன்னோடியாக திகழ்வது தொடர்பில் ஊடக நண்பர்களாக நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
இந்நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான், செயற்குழு உறுப்பினர்களான எம்.வி.எம்.ரிம்சான், எம்.என். அப்ராஸ், ஏ. எம்.பறக்கத்துல்லா, எம். நாஸிம் என பலரும் கலந்து கொண்டனர்.தேர்தல் ஆணையாளர் நாயகமாக நாட்டுக்கு சிறந்த சேவையாற்றிய முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம்.முஹம்மட் பிறைட் மீடியா நெற்வேர்க் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் யூ.கே.ஜெஸீல் மற்றும் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத், பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான் உள்ளிடோரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பிறைட் மீடியா நெற்வேர்க் நிறுவனத்தின் அனுசரணையில் சென்றல் ரீவி மற்றும் சிலோன் மீடியா போரம் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர்கள் தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல் தொடர்பான செயலமர்வு (12) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்து இக்கௌரவிப்பு இடம்பெற்றது.


சிலோன் மீடியா போரம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 'தகவல் உரிமைச் சட்டம்' செயலமர்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (05) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள், சமூக ஊடக செயற்பட்டாளர்கள், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 75 பேர் கலந்து கொண்டனர்.
தகவல் உரிமை சட்டம் தொடர்பாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலைய த்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகேவினால் விளக்கமளிக்கப் பட்டது.
செயலமர்வில் பங்குபற்றியவர்களுக்கு நிகழ்வின் இறுதியில் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெறவுள்ள இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே, சிலோன் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நுருல் ஹூதா உமர், பிரதித் தலைவர்களான எஸ்.அஷ்ரஃப்கான், ரீ.கே.றஹ்மதுல்லாஹ் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.