தேர்தல் ஆணையாளர் நாயகமாக நாட்டுக்கு சிறந்த சேவையாற்றிய முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம்.முஹம்மட் பிறைட் மீடியா நெற்வேர்க் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் யூ.கே.ஜெஸீல் மற்றும் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத், பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான் உள்ளிடோரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பிறைட் மீடியா நெற்வேர்க் நிறுவனத்தின் அனுசரணையில் சென்றல் ரீவி மற்றும் சிலோன் மீடியா போரம் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர்கள் தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல் தொடர்பான செயலமர்வு (12) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்து இக்கௌரவிப்பு இடம்பெற்றது.

Post A Comment: