சிலோன் மீடியா போரத்தின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் அறிமுக விழா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜித் தலைமையில் சிலோன் மீடியா போரத்தின் தலைமையகத்தில் இன்று (14) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா, கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிவின் செயலாளர் ஏ.எல்.எம்.இன்சாட்,, சிலோன் மீடியா போரத்தின் உப தலைவர் எஸ் அஸ்ரஃப்கான், பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர், முன்னாள்.இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப்.எம்.தில்சாத், சிலோன் மீடியா போரத்தின் உப செயலாளர்களான கியாஸ் ஏ . புஹாரி, எம்.எம்.ஜபீர் உட்பட போரத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸினால் போரத்தின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் வெளியிட்டு வைக்கப்பட்டது.
Next
This is the most recent post.
Previous
Older Post

Post A Comment: